2013-03-22 16:30:45

Pérezடம் திருத்தந்தை பிரான்சிஸ் : சர்வாதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவைச் சீர்செய்ய வேண்டும்


மார்ச்,22,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காகவும், தனது திருத்தந்தை பணிக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டதாக, அர்ஜென்டினா நாட்டு மனித உரிமை ஆர்வலரும், நொபெல் அமைதி விருது பெற்றவருமான Adolfo Pérez Esquivel கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசிய பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த Pérez, சர்வாதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவைச் சீர்செய்ய வேண்டும் மற்றும் உண்மையிலும் நீதியிலும் முன்னோக்கி நடக்க வேண்டும் என்று
திருத்தந்தை தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
நற்செய்திக்காக உயிரை அளித்த மறைசாட்சிகளின் வாழ்வு எவ்வளவு அழகானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தன்னிடம் கூறியதாகவும் Pérez கூறினார்.
மேலும், 1970களில் அர்ஜென்டினாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றபோது அருள்தந்தையாக இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, சர்வாதிகாரி Rafael Videlaவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் Pérez தெரிவித்தார்.
இதற்கிடையே, அர்ஜென்டினாவின் சர்வாதிகார ஆட்சியின்போது தான் கடத்தப்பட்டதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்விதத்திலும் பொறுப்பில்லை என்று அருள்திரு Francisco Jalics கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.