2013-03-20 16:09:14

திருத்தந்தை பிரான்சிஸ் மக்களின் திருத்தந்தை என்ற பெயரை தனக்கு உரிமையாக்கிக்கொண்டுள்ளார் - இந்தியத் திருப்பீடத் தூதர்


மார்ச்,20,2013. மக்களின் திருத்தந்தை என்ற பெயரை ஏற்கனவே தனக்கு உரிமையாக்கிக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்கச் சூழலில் ஆற்றிய பணிகள் அவரது தலைமைப் பணிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று இந்தியத் திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio கூறினார்.
இச்செவ்வாயன்று திருத்தந்தையின் பணியேற்பு திருப்பலி நிகழ்ந்த அதே நாளில், டில்லியில் பல்லாயிரம் மக்களுடன் கூடி நன்றித் திருப்பலி நிறைவேற்றிய பேராயர் Pennacchio இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்க ஆயர் பேரவையும், டில்லி உயர்மறை மாவட்டமும் இணைத்து ஏற்பாடு செய்திருந்த இத்திருப்பலியில், ஆயர் பேரவையின் தலைமைச் செயலர் Albert D' Souza அவர்களும், டில்லி பேராயர் Anil Couto அவர்களும், டில்லி முன்னாள் பேராயர் Vincent Concessao அவர்களும் கலந்துகொண்டனர்.
இத்திருப்பலியில் கலந்துகொண்ட பல அரசுத் தலைவர்களும், பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வாழ்த்தி, செய்திகள் வழங்கினர்.








All the contents on this site are copyrighted ©.