2013-03-19 16:17:26

திருத்தந்தை பிரான்சிஸ் Buenos Aires மக்களிடம் தொலைபேசியில் : தொலைவிலுள்ள இந்த உங்கள் ஆயரை மறக்காதீர்கள்


மார்ச்,19,2013. அன்புக் குழந்தைகளே, நீங்கள் இந்த வளாகத்தில் இருந்து எனக்காகச் செபித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். செபம் எனக்குத் தேவைப்படுகின்றது. செபிப்பது எவ்வளவு அழகானது. செபத்திற்கு மிக்க நன்றி. நான் உங்களிடம் ஓர் உதவி கேட்க விரும்புகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து நடப்போம். நாம் ஒருவர் ஒருவர்மீது கரிசனையாக இருப்போம். யாரையும் புண்படுத்தாதீர்கள். வாழ்வுமீது விழிப்புணர்வு கொண்டிருங்கள். குடும்பம், இயற்கை, குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோர்மீது அக்கறை காட்டுங்கள். வெறுப்புணர்வும், சண்டையும் உங்களிடையே இருக்கக்கூடாது. பொறாமையையும் பகைமையையும் ஒதுக்கி வையுங்கள். உங்களது இதயங்கள் எப்பொழுதும் இறைவன் பக்கம் இருந்து அவரில் வளர வேண்டும். இறைவன் நல்லவர். எப்பொழுதும் மன்னிப்பவர். அவர் புரிந்து கொள்பவர். அவர் உங்கள் நல்ல தந்தை. அவரிடம் செல்லுவதற்குப் பயப்படாதீர்கள். புனித கன்னிமரியா உங்களை அதிகம் ஆசீர்வதிக்கிறார். தொலைவிலுள்ள இந்த உங்கள் ஆயரை மறக்காதீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று இந்த உங்கள் ஆயர் விரும்புகிறார். எனக்காகச் செபியுங்கள் என்று தொலைபேசியில் Buenos Aires மக்களிடம் இச்செவ்வாய் காலையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.







All the contents on this site are copyrighted ©.