2013-03-18 16:14:24

மகப்பேறு இறப்பு அதிகரிக்க தாய்மையுறும் வயதே காரணம்


மார்ச்,18,2013. தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாவதற்கு தாய்மையுறும் பெண்களின் வயதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விறப்பு விகிதம், குறிப்பாக கிருஷ்ணகிரி, தேனி பகுதிகளில் அதிகமாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம், சிசுக்கள் இறப்பு விகிதத்தைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடும் சூழலில், ஆப்பிரிக்க நாடுகளில் மகப்பேறு இறப்பு ஒரு லட்சத்திற்கு 820 ஆகவும், வளர்ந்த நாடுகளில் 9 ஆகவும் உள்ளன. இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு லட்சம் பெண்கள் மகப்பேறின்போது இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாவதற்கு, தாய்மையுறும் பெண்களின் வயதும் ஒரு முக்கிய காரணமாகும் என கண்டறியப்பட்டுள்ளது. திருமண வயது சட்டப்படி 18 எனினும், மகப்பேறு இறப்பு விகிதத்தில் 4 விழுக்காட்டினர் மிகவும் இளம் பருவ பெண்கள் தான் என தெரியவந்துள்ளது. இதில் 10 விழுக்காட்டினருக்கும் அதிகமான இறப்பு கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களில்தான் என, கண்டறியப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேல் தாய்மையுறும் பெண்களிடையே இறப்பு விகிதம் அதிகமுள்ள மாவட்டங்கள் திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் சென்னை எனவும், மகப்பேறு இறப்பு விகித்த்தில் 80 விழுக்காட்டிற்கு பொருளாதார பின்னடைவே காரணம், எனவும் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.