2013-03-18 16:10:35

இந்தோனேசிய குருவுக்கு தென்கொரிய நீதி மற்றும் அமைதி அமைப்பின் விருது


மார்ச்,18,2013. இந்தோனேசிய அரசுக்கும் பாப்புவா பகுதியின் சுதந்திர போராட்ட நடவடிக்கையாளர்களுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து வருவதற்கென இவ்வாண்டிற்கான அமைதி விருதை அருட்தந்தை Neles Tebay அவர்களுக்கு வழங்கியுள்ளது தென்கொரிய தலைநகரிலிருந்து இயங்கும் நீதி மற்றும் அமைதி அமைப்பு.
ஜெயபுரா உயர்மறைமாவட்டத்திலிருந்து பணியாற்றும் இந்தோனேசியஅருட்தந்தை Tebay, இவ்விருது குறித்துப் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாகஇடம்பெற்றுவரும் வன்முறை மற்றும் மோதலகளில் அதிகஅளவில் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவி பொதுமக்களே என்றநிலையில் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும்வரையில் தன் முயற்சிகள் ஓயப்போவதில்லை என்றார்.
1969ம் ஆண்டு பாப்புவா பகுதியை தன் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்தஇந்தோனேசியா, 2001ம் ஆண்டு அப்பகுதிக்கு மேம்பட்டசுயஆட்சி உரிமையை வழங்கியுள்ள போதிலும், பாப்புவா பகுதியின் பூர்வீகக் குடிமக்கள் இன்னும் அரசின் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகஅருட்தந்தை Tebay மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.