2013-03-12 16:35:04

பாகிஸ்தான் ஆயர் : கிறிஸ்தவர்கள்மீதான தாக்குதல்களை அரசு தடை செய்திருக்கலாம்


மார்ச்,12,2013. பாகிஸ்தானின் நலிந்த சிறுபான்மை கிறிஸ்தவச் சமூகத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு அரசு அதிகாரிகள் தவறியுள்ளனர் என, லாகூர் உயர்மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் செபஸ்தியான் ஷா குறை கூறினார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு மனிதர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு பெரும் வன்முறை தாக்குதலுக்கு இட்டுச் சென்றுள்ளது எனவும், இதனால் கடந்த சனிக்கிழமையன்று மூவாயிரம் பேர் கொண்ட கும்பல் ஒன்று, கிறிஸ்தவர்களின் ஜோசப் காலனியைச், சூறையாடி, அங்கிருந்த 180 வீடுகளுக்கும் இரண்டு ஆலயங்களுக்கும் தீ வைத்துள்ளது எனவும் ஆயர் ஷா கூறினார்.
கிறிஸ்தவர்கள், தங்களின் குடியிருப்புக்கள் தீயினால் கொளுத்தப்பட்டதைத் தடைசெய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் என்றுரைத்த ஆயர் ஷா, இத்தாக்குதல்களை அரசு தடை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுவது உட்பட 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியாக அளிக்கப்படும் என, பாகிஸ்தான், அரசுத்தலைவர் Asif Ali Zardari அறிவித்துள்ளார், இந்தப் பணம் மக்களின் காயங்களையும், அவர்களின் மனபயத்தையும் குணப்படுத்தாது என்றும் ஆயர் ஷா கூறினார்.







All the contents on this site are copyrighted ©.