2013-03-12 16:36:14

நோய்எதிர்ப்புச் சக்திக்கு கட்டுப்படாத தன்மை அதிகரிக்கிறது


மார்ச்,12,2013. Antibiotic எனப்படும் நோய்எதிர்ப்புச் சக்தி மருந்துகளுக்கு, நோய்க் கிருமிகள் பாதிக்கப்படாத தன்மை அதிகரித்துவருவது, பயங்கரவாதத்தைவிட மேலும் பெரிய ஆபத்து என்று பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி Sally Davies எச்சரித்துள்ளார்.
புதிய நோய்எதிர்ப்புச் சக்தி மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், சாதாரணமாக நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள்கூட இன்னும் 20 ஆண்டுகளில் மிகவும் ஆபத்தானவையாகக்கூடும் என்று Davies கூறினார்.
புதிய நோய்க்கிருமிகள் தினமும் உருவாகி வருகின்றன, மேலும், தற்போது இருக்கும் கிருமிகளும் சாதாரண சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்படாத தன்மை உருவாகி வருகிறது என்று அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.