2013-03-11 15:41:45

இரத்தம் மற்றும் உறுப்பு தானம் குறித்து தமிழகத் திருஅவையில் கருத்தரங்குகள்


மார்ச்,11, 2013. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் இரத்தம் மற்றும் உறுப்பு தானம் வழங்குவதில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும் என, தமிழகக் கத்தோலிக்கத் திருஅவை இத்தவக்காலத்தில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது..
சுயநலமாக வாழாமல் மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு தவக்காலமே சிறந்த ஒரு காலம் என்றும், இதுவே உண்மையான தியாகமாக இருக்கமுடியும் என்றும் இயேசு சபை அருள்பணியாளர் ஜெரி ரொசாரியோ கூறினார்.
தன் மரணத்திற்குப் பின், உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக எழுதி வைத்துள்ள அருள்பணியாளர் ஜெரி ரொசாரியோ, சென்னை நகரில் மட்டும் 500க்கும் மேற்பட்ட இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தவக்காலத்தின் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் திருப்பலிக்குப்பின் இரத்த மற்றும் உறுப்புதானத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழகத்தின் பல பங்குதளங்கள் விழிப்புணர்வு கருத்தங்குகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.