2013-03-09 15:47:08

பல்வேறு சமய மற்றும் அரசுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அணு ஆயுதங்களுக்கு எதிராக அழைப்பு


மார்ச்,09,2013. வட கொரியா போன்ற நாடுகள் அண்மையில் அணு ஆயுத அச்சுறுத்தல்களை விடுத்துள்ளவேளை, அணு ஆயுதங்கள் மனித சமுதாயத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லி, அவை உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படுமாறு, பல்வேறு சமய மற்றும் அரசுகளின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ICAN என்ற அனைத்துலக அணு ஆயுத ஒழிப்பு அமைப்பு, நார்வே நாட்டு ஆஸ்லோவில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு சமயத் தலைவர்கள், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமுதாயப் பிரதிநிதிகள் மற்றும் 132 அரசுகளின் பிரதிநிதிகள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நைஜீரியக் கர்தினால் John Onaiyekan, குடிமக்கள் சமுதாயத்தில் அணு ஆயுதங்களுக்கு வேலை இல்லை என்று கூறினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜப்பானிய ஆயர் Laurence Yutaka Minabe, ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பில் தப்பிய பெற்றோருக்குப் பிறந்த தனது அனுபவம் குறித்தும், அவரது தந்தை புற்றுநோயால் இறந்தது குறித்தும் விளக்கினார்.
இன்று உலகில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் அணு ஆயுத சக்தியுடைய நாடுகளாகக் கருதப்படுகின்றன. உடனடியாகப் பயன்படுத்தவல்ல 4,100 அணு ஆயுதங்கள் உட்பட ஏறக்குறைய 17,000 அணு ஆயுதங்கள் தற்போது உலகில் உள்ளன.







All the contents on this site are copyrighted ©.