2013-03-09 15:29:16

கற்றனைத் தூறும் மிக அதிக வயதான மரங்கள்


கலிபோர்னியா மாநிலத்தின் கிழக்கே, Inyo பகுதியில் அமைந்துள்ள வெள்ளை மலைச் சாரலில் வளர்ந்திருக்கும் ஊசிஇலை மரம் ஒன்று, இவ்வாண்டின் ஆரம்பம் வரை, மிகப் பழமையான மரம் என்று கருதப்பட்டது. மரத்தின் தண்டுப்பகுதியில் அடுக்கடுக்காய் அமைந்துள்ள பல வளையங்களை Radiocarbon Dating என்ற முறையைப் பயன்படுத்தி கணக்கிட்டு, மரங்களின் வயதை நிர்ணயிக்க முடியும். அவ்விதம் இம்மரத்தின் வயது 4844 அல்லது 4845 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் பெயர் மெத்துசேலா. விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மனிதர்களிலேயே மிக அதிக காலம், அதாவது 969 ஆண்டுகள், வாழ்ந்தவர் மெத்துசேலா. எனவே இவரது பெயர் இந்த மரத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது. மெத்துசேலாவைப்பற்றி தொடக்கநூல் 5ம் பிரிவில் (5: 25-26) வாசிக்கிறோம்.
இவ்வாண்டு (2013) கலிபோர்னியாவின் அதே மலைச்சாரலில் மற்றொரு ஊசிஇலை மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் வயது 5062 அல்லது 5063 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.