2013-03-08 15:34:02

அமெரிக்கக் கத்தோலிக்கர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மீது மிக உயரிய எண்ணம்


மார்ச்,08,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தையாகப் பணிபுரிந்த ஆண்டுகள் பற்றி அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர் மிக உயரிய எண்ணம் கொண்டிருக்கின்றனர் என்று Knights of Columbus அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.
ஏறக்குறைய 77 விழுக்காட்டுக் கத்தோலிக்கரும், கத்தோலிக்கத்தை நடைமுறைப்படுத்தும் விசுவாசிகளில் 82 விழுக்காட்டினரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் திருத்தந்தைப் பணி குறித்து மிக நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
தங்களது வாழ்க்கையிலும், திருஅவையை வழிநடத்தியதிலும், உலகுக்கு அறநெறிப் பாதையைக் காட்டியதிலும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று அமெரிக்கக் கத்தோலிக்கர் தெரிவித்ததாக அக்கருத்துக் கணிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.