2013-03-07 16:13:13

கருணைக் கொலைகள் சட்டத்தில் 15 வயதுக்கு உட்பட்டோரையும் இணைக்கும் முயற்சிக்கு, பெல்ஜியம் ஆயர்கள் எதிர்ப்பு


மார்ச்,07,2013. பெல்ஜியம் நாட்டில் 2002ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கருணைக் கொலைகள் சட்டத்தில் தற்போது 15 வயதுக்கு உட்பட்டோரையும் இணைக்கும் முயற்சிக்கு, அந்நாட்டு ஆயர்கள் வன்மையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
2002ம் ஆண்டு இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபோது, தங்கள் எதிர்ப்பையும் கவலைகளையும் ஆயர்கள் வெளியிட்டனர் என்பதைக் கூறிய Mechelen-Brussels பேராயர் André-Joseph Léonard, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தம் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
நோயுற்றவர்களைப் பராமரிக்கும் பொதுநலத் துறைக்கு இன்னும் அதிகமான நிதியை ஒதுக்கி, மக்களைக் காக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடுவதே நீதியான ஒரு வழி என்று பேராயர் Léonard வலியுறுத்தினார்.
குடியாட்சி, மனித மாண்பு இவற்றை இன்னும் வலிமையுள்ளதாக மாற்றுவதற்குப் பதில், மனித உயிர்களைப் பறிக்கும் வன்முறையில் அரசே ஈடுபடுவது மிகவும் தவறான ஒரு போக்கு என்று பேராயர் Léonard எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.