2013-03-07 16:11:21

கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்கள் கூடிவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - கர்தினால் Boutros Rai


மார்ச்,07,2013. மத்தியக்கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளைத் தீர ஆய்வு செய்வதற்காக, அப்பகுதிகளில் பணிபுரியும் அனைத்து கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்கள் கூடிவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கர்தினால் Bechara Boutros Rai கூறினார்.
கான்கிளேவ் அவையில் கலந்துகொள்வதற்கென உரோம் நகர் வந்திருக்கும் அந்தியோக்கு மாரனைட் ரீதி முதுபெரும் தலைவர் கர்தினால் Boutros Rai, மத்தியக்கிழக்குப் பகுதிகளில் பணிபுரியும் பல்வேறு ரீதித் தலைவர்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள வலுவான உறவுகளைக் குறித்துப் பேசினார்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ரீதியின் திருத்தந்தை என்று அழைக்கப்படும் முதலாம் Tawadros, கடந்த மாதம் 10ம் தேதி தலைமைப் பொறுப்பினை ஏற்றபோது, அச்சடங்கில் தான் கலந்து கொண்டதைப் பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் Boutros Rai, உரோம் நகர் வருவதற்கு முன் மாஸ்கோவில் உள்ள இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill அவர்களைச் சந்தித்ததையும் குறிப்பிட்டார்.
கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும் ஏனைய கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே கொள்கைகள் அளவிலும் நடைமுறை அளவிலும் உருவாக வேண்டிய ஒன்றிப்பு முயற்சிகள் விரைவில் துவங்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் கர்தினால் Boutros Rai.








All the contents on this site are copyrighted ©.