2013-03-06 15:23:25

மார்ச் 07, கற்றனைத் தூறும்…. மனித உடல் - அபூர்வத் தகவல்கள்!


ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
மனிதரின் நாவில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்றாயிரம்.
கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
கண் தானத்தில் கருவிழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.
ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் இரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.
நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விடும்.
பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.
ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.
நிறைவான வாழ்வுக்காலம் என்பது 120 ஆண்டுகள் நலமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.







All the contents on this site are copyrighted ©.