2013-03-05 15:40:26

நவீன அடிமைத்தனம் அதிகரிப்பு


மார்ச்,05,2013. மனித வியாபாரம் இக்காலத்தில் அதிகரித்து வருவதை, நவீனக் கலாச்சாரத்தில் இடம்பெறும் கருக்கலைப்பு, கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும் பாலியல்சார்ந்த இழிபொருள்கள் அதிகரித்திருப்பதில் உணர முடிகின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.
17, 18 அல்லது 19ம் நூற்றாண்டுகளில் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக இடம்பெற்ற அடிமை வியாபாரத்தைவிட 21ம் நூற்றாண்டில் அதிகமான மக்கள் வியாபாரம் செய்யப்படுகின்றனர் என்று, டென்வர் அருள்பணியாளர் டேவிட் நிக்ஸ் கூறினார்.
இக்காலத்தில் 2 கோடியே 70 இலட்சம் பேர் அடிமை வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், இவர்களில் 8 இலட்சம் பேர் பாலியல் தொழிலுக்காக அனைத்துலக எல்லைகளில் வியாபாரம் செய்யப்படுகின்றனர், இவர்களில் 20 இலட்சம் பேர் சிறார் என்றும் அக்குரு தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.