2013-03-05 15:35:39

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் நன்றிச் செய்தி


மார்ச்,05,2013. விசுவாசம் சார்ந்த விவகாரங்களில் உறுதியுடன் செயல்பட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, கிறிஸ்துவில் தனது அன்பையும் மரியாதையையும் தெரிவித்துள்ளார் மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் முதலாம் Kirill.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது பாப்பிறைப் பதவியிலிருந்து விலகியதையொட்டி அவருக்கு நன்றி சொல்லி அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் முதுபெரும் தலைவர் Kirill.
விசுவாசம் சார்ந்த விவகாரங்களில் உறுதியுடன் செயல்பட்டது, திருஅவை மரபுகளின்படி வாழ்வதில் பற்றுறுதி, தாழ்ச்சி, துணிச்சல் போன்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வாழ்வுமுறைகள் எப்பொழுதும் எம்முடன் இருக்கும் என்றும் முதுபெரும் தலைவர் Kirillன் செய்தி கூறுகிறது.
மாஸ்கோ மற்றும் அனைத்து இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை, கீழைமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளில் பெரியதாகும்.







All the contents on this site are copyrighted ©.