2013-03-05 15:37:03

ஆப்ரிக்காவின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அக்கண்டத்தின் திருஅவைக்கு அழைப்பு


மார்ச்,05,2013. ஆப்ரிக்கக் கண்டம் எதிர்நோக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரச் சவால்களைச் சரிசெய்வதற்கு, ஆப்ரிக்காவிலுள்ள திருஅவை இன்னும் அதிக ஊக்கத்துடனும் உறுதியுடனும் முயற்சிகளை எடுக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் கூறினர்.
Ghana நாட்டின் Accraவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பின் பேரவையில் உரையாற்றிய பேராயர் Charles Gabriel Palmer-Buckle இவ்வாறு கூறினார்.
மக்களாட்சி, நல்ல நிர்வாகம், அனைத்துலக வன்முறை, ஏழ்மை ஒழிப்பு, வெப்பநிலைமாற்றம் மற்றும் பிற விவகாரங்கள் உலகளாவிய சவால்களோடு தொடர்பு கொண்டுள்ளன எனக் கூறிய பேராயர் Palmer Buckle, பல ஆப்ரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்குமேல் ஆகியும் இன்னும் அக்கண்டம் மில்லென்யம் இலக்குகளை மிகக் குறைவாகவே எட்டியுள்ளன என்றும் கூறினார்.
SECAM எனப்படும் ஆப்ரிக்க ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பு, வருகிற சனிக்கிழமை வரை இப்பேரவையை நடத்துகிறது.







All the contents on this site are copyrighted ©.