2013-03-02 15:49:45

நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்


மார்ச்02,2013. நேபாளத்தில் ஊழலை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் குழு ஒன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான மனித உரிமை ஆர்வலர் Sharada Bhusal, காட்மண்டுவின் மையத்தில் அமைந்துள்ள Ratna பூங்காவில் ஆறு நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மற்ற மனித உரிமை ஆர்வலர்களும், நூற்றுக்கணக்கான பொது மக்களும், சமயக் குழுக்களும் அவருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
Mahottari மாவட்டத்திலுள்ள கிராம முன்னேற்றத்துக்கென ஒதுக்கப்பட்ட இலட்சக்கணக்கான ரூபாய்கள் உள்ளூர் அதிகாரிகளின் பைகளுக்குச் சென்றுள்ளன என்று சொல்லி, அதற்கு எதிராக வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார் Sharada Bhusal.
ஓர் அதிகாரி 19 இலட்சம் நேபாள ரூபாயையும், மற்றுமோர் அதிகாரி 70 இலட்சம் நேபாள ரூபாயையும் சுரண்டியிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஊடகச் செய்தி மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.