2013-03-02 15:43:33

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : சமுதாயம் கடைப்பிடிக்கவேண்டிய மரபுப்பண்புகளை விட்டுச் செல்கிறார்


மார்ச்02,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களது ஞானம், பல்சமய உரையாடலுக்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்திருந்தது போன்ற அவரின் உயரியப் பண்புகளைப் பாராட்டிப் பேசியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
பாப்பிறைப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள திருத்தந்தைக்குத் தனது பாராட்டுதல்களை வத்திக்கான் வானொலி மூலம் தெரிவித்த பான் கி மூன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தையாக வெளிப்படுத்திய ஆன்மீக வழிகாட்டுதல்களுக்கும் தலைமைத்துவத்துக்கும் நாம் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளோம் என்று கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குத் தான் எழுதியுள்ள கடிதத்தில் இவற்றையெல்லாம் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்த பான் கி மூன், அவர் தனது பாப்பிறைப் பணியில் காட்டிய ஞானம், உலகில் உரையாடலையும் சகிப்புத்தன்மையையும் மேலும் கட்டியெழுப்பவும், அதன்மூலம் நாம் அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த உலகில் வாழவும் வழிவகுக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.