2013-02-28 16:21:35

தூக்கமின்மை மரபணு செயல்பாடுகளைப் பாதிக்கும்


பிப்28,2013. முறையான தூக்கமின்மை மனித உடலின் செயற்பாட்டை கடுமையாகப் பாதிக்கவல்லது என்று பிரித்தானிய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வுக்காக 26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர்களின் இரத்தத்தை எடுத்து ஆய்வு செய்தனர். அடுத்து இவர்களை ஒரு வாரகாலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் இரத்தத்தை ஆய்வு செய்தனர்.
இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போதுமான தூக்கமின்மையானது, மனிதர்களின் நலனைக் கடுமையாக பாதிக்கிறது என்பதையும், குறிப்பாக இதயநோய்கள், சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், குறைவான மூளைச் செயற்பாடு ஆகியவை உருவாகலாம் என்பதையும் இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே நலமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை.








All the contents on this site are copyrighted ©.