2013-02-28 16:20:29

கர்தினால் Jean Honoréயின் மறைவைக் குறித்து திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


பிப்28,2013. இவ்வியாழனன்று இறையடி சேர்ந்த கர்தினால் Jean Honoréயின் மறைவைக் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரான்ஸ் நாட்டின் Tours உயர்மறைமாவட்ட பேராயர் Bernard-Nicolas Aubertin அவர்களுக்கு அனுதாபத் தந்தியை அனுப்பியுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையின் மறைகல்வியைத் தெளிவுற எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கர்தினால் Honoré அவர்களின் பணியைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, அவரை இழந்து வருந்தும் அவரது உறவினர்களுக்கும், Tours தலத் திருஅவைக்கும் தன் செபங்களைத் தெரிவித்துள்ளார்.
1920ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் Saint-Brice-en-Coglès என்ற இடத்தில் பிறந்த Honoré, 1943ம் ஆண்டு குருவாகவும், 1972ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார். இறையியல் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், மறைகல்வி, திருவழிபாடு ஆகியவற்றை தெளிவாக விளக்கும் பல நூல்களை எழுதியவர்.
2001ம் ஆண்டு இவரது 81வது வயதில் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இவரை ஒரு கர்தினாலாக உயர்த்தினார். கர்தினால் Jean Honoréயின் மரணத்தை அடுத்து, தற்போது உலகில் 207 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி உடையோர் 117 பேர்







All the contents on this site are copyrighted ©.