2013-02-25 17:23:34

பாகிஸ்தானில் மத மிதவாதிகளிடையே ஒத்துழைப்பு தேவை


பிப்.25,2013. அரசியல் நோக்குடைய மதச்சட்டங்களையும் பிரிவினைவாத மோதல்களையும் பாகிஸ்தானிலிருந்து நீக்க, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மத மிதவாதிகள் ஒன்றிணையவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது அந்நாட்டின் மதங்களிடையேயான ஒன்றிப்பு அவை.
பாகிஸ்தானில் மதங்களிடையேயான இணக்கப் பேச்சுவார்த்தைகள் ஊக்குவிக்கப்படுவதில்லை எனக் குறை கூறிய, மதங்களிடையேயான ஒன்றிப்பு அவை குழுவின் இயக்குனர் முகமது வாசிம், பாகிஸ்தானின் மதச்சகிப்பற்ற தன்மையும் தேவநிந்தனைச் சட்டமும், இரு மதங்களும் நெருங்கி வருவதற்கு தடையாக இருக்கின்றன என்றார்.
1990க்கும் 2012க்கும் இடைப்பட்டக் காலத்தில், தேவநிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் 52 பேர் சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதையும் இக்கிறிஸ்தவ-இசுலாமிய குழு சுட்டிக்காட்டியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.