2013-02-22 15:49:24

Libreville அமைதி ஒப்பந்தம் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் முற்றிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - ஆப்ரிக்க ஆயர்கள்


பிப்.22,2013. இவ்வாண்டு சனவரி 11ம் தேதி மத்திய ஆப்ரிக்காவில் நிறைவேற்றப்பட்ட Libreville அமைதி ஒப்பந்தம் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் முற்றிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆப்ரிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
போராடும் இனங்கள் ஆயுதங்களைக் களைந்து, அமைதியைத் தேடவும், இன மோதல்களால் துன்புறும் மக்களின் வேதனைகள் முடிவுக்கு வரவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய ஆப்ரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகள் போராடும் வன்முறை கும்பல்களின் கைவசம் இருப்பதால், அங்கு மருத்துவமனைகள், பள்ளிகள் பெரிதும் சேதமடைந்துள்ளன என்றும், பெண்கள் தினமும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
பெரும் கலவரங்கள் வெடிப்பதற்கு முன், அனைத்துலக நாடுகள் தலையிட்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.