2013-02-21 15:52:58

கொசுக்கள், வேதியல் பொருட்களுக்கு விரைவில் பழகிக் கொள்வதால் மருந்துகள் பயனற்று போகின்றன


பிப்.21,2013. கொசுக்களை விரட்ட நாம் தோல்மீது பூசிக்கொள்ளும் பாதுகாப்பு மருந்துகளுக்கு கொசுக்கள் விரைவில் பழகிக் கொள்வதால் இந்த மருந்துகள் பயனற்று போகின்றன என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மஞ்சள் காய்ச்சல், டெங்கு போன்ற வியாதிகளைப் பரப்பும் Aedes aegypti என்ற கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் Deet எனப்படும் பாதுகாப்பு மருந்தைக் குறித்து London School of Hygiene and Tropical Medicine நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை இவ்வியாழனன்று வெளியானது.
கொசுக்களுக்கு எதிராக ஐக்கிய நாட்டு படைவீரர்கள் பயன்படுத்திய Deet எனப்படும் மருந்துக்கு Aedes aegypti வகை கொசுக்கள் விரைவில் பழகிக்கொள்வதால், அவை மனிதரை மீண்டும் தாக்கும் ஆபத்து உள்ளதென்று இந்த ஆய்வில் வெளியானது.
கொசுக்கள் பயன்படுத்தும் Antenna வகை நுண்ணுணர்வுக் கருவிகள் பல்வேறு வேதியல் பொருட்களுக்குப் பழக்கமடைந்துவிடுவதால், தடுப்பு மருந்துகள் பயனின்றி போகின்றன என்று இந்த ஆய்வை மேற்கொண்ட முனைவர் James Logan கூறினார்.








All the contents on this site are copyrighted ©.