2013-02-18 15:37:10

சமூகத்தில் குடும்பங்களின் இடத்தை வலியுறுத்தி திருப்பீடப் பிரதிநிதி ஐ.நாவில் உரை


பிப்.18,2013. சமுதாயத்தின் வளமாக நோக்கப்படும் குடும்பங்களுக்கு கொள்கை வடிவமைப்புகள் மூலம் ஆதரவு வழங்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் குடும்பங்களுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் வின்சென்ஸோ பாலியா.
குடும்பங்களுக்கான அகில உலக ஆண்டு ஐ.நா.வால் கொண்டாடப்பட்டதன் 20ம் ஆண்டு நினைவையும் குடும்பங்களின் உரிமைகள் குறித்த திருப்பீட ஏட்டின் 30ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும்விதமாக ஐ.நா.விற்கானத் திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் அவை ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் பாலியா, தலைமுறைகள் சந்திக்கும், அன்புகூரும், கற்றுக்கொள்ளும், ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்கும் இடமாக இருக்கும் குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படைக்கூறு என்றார்.
அரசுகள் கொள்கைத்திட்டங்களை வகுக்கும்போது குடும்பங்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பேராயர்.
இன்றைய உலகில் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்து அவைகளை நிவர்த்திச் செய்வதில் சமூகத்தின் கடமைகளையும் வலியுறுத்தினார் பேராயர் பாலியா.








All the contents on this site are copyrighted ©.