2013-02-13 16:34:28

பிப்ரவரி 28ம் தேதியன்று கர்தினால்களைச் சந்திக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


பிப்.13,2013. இம்மாதம் 28ம் தேதியோடு தனது பாப்பிறைப் பணியை நிறைவு செய்யும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின், 28ம் தேதிவரையிலான நிகழ்ச்சிகள் குறித்து நிருபர் கூட்டத்தில் இப்புதனன்று விளக்கினார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.
14 வியாழன் : பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களைச் சந்தித்தல்
15 வெள்ளி : "Pro Petri Sede" கழகத்தினரையும், ரொமானிய அரசுத்தலைவரையும் சந்தித்தல்
16 சனி : குவாத்தமாலா அரசுத்தலைவரைச் சந்தித்தல்
இந்த நாள்களில் இத்தாலியின் Liguria மற்றும் Lombardy மாநிலப் பகுதி ஆயர்களை சந்தித்தல் (ad limina)
16 சனி : மாலை 6 மணி இத்தாலிய பிரதமர் Mario Montiஐ சந்தித்தல்
17 ஞாயிறு : மூவேளை செப உரைக்குப் பின்னர் முதல்
23 சனி : காலை வரை ஆண்டுத் தியானம்
23 சனி : இத்தாலிய அரசுத்தலைவர் Giorgio Napolitanoவைச் சந்தித்தல்
24 ஞாயிறு : நண்பகல் வழக்கமான மூவேளை செப உரை
25 திங்கள் : சில கர்தினால்களைத் தனியாகச் சந்தித்தல்
27 புதன் : வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் பொது மறைபோதகம்
28 வியாழன் : பாப்பிறைப் பணியின் இறுதி நாளன்று வத்திக்கான் கிளமெந்தின் அறையில் கர்தினால்களைச் சந்தித்தல்
அன்று மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் காஸ்தெல் கந்தோல்ஃபோவுக்குப் பயணம்







All the contents on this site are copyrighted ©.