2013-02-09 15:51:17

போதைப்பொருளைச் சட்டப்படி அங்கீகரிப்பதற்கான முயற்சிக்கு அர்ஜென்டினா பேராயர் எதிர்ப்பு


பிப்.09,2013. அர்ஜென்டினா நாட்டில் போதைப்பொருளைச் சட்டப்படி அங்கீகரிப்பதற்கான அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Maria Arancedo.
போதைப்பொருள்களைச் சட்டப்படி அங்கீகரிப்பது, இவை எவ்விதக் கெடுதியும் செய்யாது என்ற எண்ணத்தை உருவாக்கும் என, தலைநகர் Buenos Aires பேராயரான Maria Arancedo கூறினார்.
மரிஹூவான போன்ற போதைப்பொருள்களைச் சட்டப்படி அங்கீகரிப்பது குறித்து கலந்துபேசுவதற்குத் தான் தயாராக உள்ளதாக, Santa Fe ஆளுனர் Antonio Bonfatti கூறியுள்ளதையடுத்து, El Litoral என்ற தினத்தாளில் இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார் பேராயர் Maria Arancedo.
போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படுவதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்குச் சமுதாயம் முயற்சிப்பதாகத் தெரியவில்லை என்ற பேராயர் Maria Arancedo, இந்தப் போதைப்பொருள் பழக்கத்தால் இளையோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.