2013-02-09 15:47:48

பேராயர் Müller: அமெரிக்கத் திருஅவையில் இணைந்துள்ள ஆங்லிக்கன் குழுக்கள் கொடைகளைக் கொண்டு வந்துள்ளனர்


பிப்.09,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்துள்ள ஆங்லிக்கன் குழுக்கள் தங்களது பாரம்பரியங்களைப் பெரியதொரு கத்தோலிக்கச் சமூகத்திற்குக் கொண்டுவருவதில் துணிச்சலுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் பேராயர் Gerhard Müller.
அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்துள்ள “ஆங்லிக்கன் குழுக்களின் (U.S. ordinariate) மறைப்பணி” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Müller, அகில உலக கத்தோலிக்கத் திருஅவையில் அவர்களின் மரபுக்கொடைகளை வழங்குவதில் துணிச்சலான முன்னோடிகளாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆங்லிக்கன் குழுக்களின் மரபுகள், செபமுறைகள், வழிபாடுகள் ஆகியவை திருஅவையில் உண்மையான ஒன்றிப்புக்குத் தடைகளாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் Müller.







All the contents on this site are copyrighted ©.