2013-02-08 16:24:32

வேளாங்கண்ணி விடியற்காலை விண்மீன் ஆலயம்


பிப்.08,2013. தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னைத் திருத்தலம் சிறிய (மைனர்) பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டதன் பொன்விழாவை முன்னிட்டு விடியற்காலை விண்மீன் என்ற புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் அடிக்கல்நாட்டு விழா 2011ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியன்று நடைபெற்றது. இந்த ஆலயத் திறப்பு விழா 10.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும். திருத்தந்தையின் பிரதிநிதியாக, இவ்விழாவில் கலந்து கொள்ளும் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள் இவ்வாலயத்தைப் புனிதம் செய்து திறந்து வைப்பார்கள். அவருடன் இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ, கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்த விழாவில் ஏறக்குறைய 25 ஆயிரம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடியற்காலை விண்மீன் ஆலயத்தின் சிறப்பு அம்சங்கள்:

120 அடி அகலம், 500 அடி நீளம், 40 அடி உயரம் மேற்கூரையிலிருந்து.
150 அடி உயர கோபுரம்.
10 ஆயிரம் பேர் அமர்ந்து செபிக்கக்கூடிய கொள்ளளவு
இவ்வாலயத்தினுள் எவ்விதத் தூண்களும் இல்லாவண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.