2013-02-06 15:57:07

பேராயர் சாக்கோ தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது ஈராக்கில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் - அருள்தந்தை Halemba


பிப்.06,2013. கல்தேய ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமன ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பேராயர் லூயிஸ் சாக்கோ, அப்பொறுப்பிற்குத் தகுதியான மனிதர் என்று அருள்தந்தை Andrzej Halemba கூறினார்.
பிப்ரவரி 2, கடந்த சனிக்கிழமையன்று திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட பேராயர் லூயிஸ் சாக்கொவைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய Aid to the Church in Need பிறரன்பு அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அருள்தந்தை Halemba இவ்வாறு கூறினார்.
பேராயர் சாக்கோ தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது ஈராக்கில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் என்று கூறிய அருள்தந்தை Halemba, பேராயரின் பணி இன்னும் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
1987ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கின்படி, ஈராக்கில் 14 இலட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். இவ்வெண்ணிக்கை படிப்படியாகக் குறைத்து, பத்தாண்டுகளுக்கு முன்னர் 8 இலட்சமாகவும், தற்போது 3 இலட்சமாகவும் உள்ளதென்று ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.