2013-02-05 16:10:32

கொலம்பியாவில் 15 நாள்களுக்குள் இரண்டு குருக்கள் கொலை


பிப்.05,2013. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 15 நாள்களுக்குள் இரண்டு கத்தோலிக்க குருக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Villavicencio உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்திரு Luis Alfredo Suárez Salazar என்பவர், கடந்த சனிக்கிழமையன்று Ocañaவின் Torcoroma அன்னைமரி ஆலயத்தில் திருப்பலியை நிறைவேற்றிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மனிதர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
உள்ளூர் வானொலிச் செய்தியின்படி, கொலையாளிகள் வேறு ஒருவரைக் குறிவைத்துக் கொல்ல முயற்சித்தபோது இக்குரு கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
கடந்த சனவரி 16ம் தேதி கொலம்பியாவின் Bugaவில் 55 வயதான அருள்திரு José Francisco Velez Echeverri என்பவர் கொலை செய்யப்பட்டார்.
2012ம் ஆண்டில் அமெரிக்காவில் 6 குருக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பிரேசிலிலும், இருவர் மெக்சிகோவிலும், ஒருவர் கொலம்பியாவிலும், இன்னுமொருவர் குவாத்தமாலாவிலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.