2013-02-05 16:05:37

இந்திய காரித்தாஸ் : ஒருவருடைய உயிரைப் பறிப்பதற்கு எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது


பிப்.05,2013. மரண தண்டனை உட்பட, பாலியல் வன்கொடுமை குறித்த புதிய சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளவேளை, ஒரு மனிதருடைய உயிரைப் பறிப்பதற்கு, வேறு எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது என்று கூறியுள்ளார் புதுடெல்லி உயர்மறைமாவட்ட அரசுசாரா அமைப்பின் இயக்குனர் அருள்திரு சவரி ராஜ்.
இந்திய அரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ள சட்டத்தின்படி, அதிகபட்ச, குறைந்தபட்சத் தண்டனைகளோடு, பாலியல் வன்கொடுமையின்போது அப்பெண் இறந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த, இந்திய காரித்தாஸோடு தொடர்புடைய புதுடெல்லி உயர்மறைமாவட்ட அமைப்பின் இயக்குனர் அருள்திரு சவரிராஜ், ஆயுள்தண்டனை சரியானது என்றும் கூறியுள்ளார்.
அதேநேரம் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பலவிதமான வன்கொடுமைகளை நிறுத்துவதற்கு மரணதண்டனை தீர்வாக அமையாது என்று கூறியுள்ளார் அருள்திரு சவரிராஜ்.







All the contents on this site are copyrighted ©.