2013-01-30 15:59:43

பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவும் ஆபத்து உள்ளது - FAO எச்சரிக்கை


சன.30,2013. தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், 2006ம் ஆண்டு உலகின் பல பாகங்களிலும் பரவிய பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவும் ஆபத்து உள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) கூறியுள்ளது.
உலகில் தொடர்ந்து வரும் பொருளாதாரச் சரிவின் ஒரு விளைவாக, H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சல் கிருமிகள் குறித்த ஆய்வுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறும் FAO அமைப்பின் தலைவர் Juan Lubroth, அரசுகள் விரைவில் விழித்துக் கொள்வது அவசியம் என்றும் கூறினார்.
2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு முடிய இந்நோய் தொடர்ந்து நீடித்து வந்தாலும், 2006ம் ஆண்டு இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்து, 63 நாடுகள் பாதிக்கப்பட்டன என்று FAO வின் இவ்வறிக்கை கூறுகிறது.
தற்போது காங்கோ குடியரசு நாட்டில் பெருமளவு பரவிவரும் இந்நோயின் தாக்கம் நிறுத்தப்படவில்லை எனில், தென் ஆப்ரிக்காவும், விரைவில், உலகமும் இந்நோயின் தாக்கத்தை உணரக்கூடிய ஆபத்து உள்ளது என்று FAO தலைவர் Lubroth தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.