2013-01-26 16:21:43

பொருளாதார நெருக்கடியினால் போர்த்துக்கீசியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்


சன.26,2013. கடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிவரும் போர்த்துக்கல் நாட்டிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வரை அந்நாட்டைவிட்டு வெளியேறி இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவர்களில் பலர் உயர்கல்வி படித்த இளையோர் என்றும், இவர்கள் எண்ணெய் வளமிக்க முன்னாள் போர்த்துக்கீசிய காலனி நாடான அங்கோலாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் சென்றுள்ளனர் என்றும், போர்த்துக்கல் நாட்டின் குடியேற்றதாரர் அவையின் செயலர் ஜோசே செசாரியோ கூறினார்.
1960களில் பிரான்சுக்குச் சென்ற போர்த்துக்கீசியக் குடியேற்றதாரர் தற்போது ஆப்ரிக்காவின் அங்கோலா, மொசாம்பிக் மற்றும் சுவிட்சர்லாந்துக்குச் செல்கின்றனர் என்றும் செசாரியோ கூறினார்.








All the contents on this site are copyrighted ©.