2013-01-25 16:09:07

வியட்னாமில் ஒரு கட்சி ஆட்சி முடிவுக்கு வர கத்தோலிக்கர் வலியுறுத்தல்


சன.25,2013. வியட்னாமில் ஒரு கட்சி ஆட்சி முடிவுக்கு வருவதை வலியுறுத்தும் மனு ஒன்றில் அந்நாட்டுக் கத்தோலிக்கர், அறிவாளர்கள், அரசியல்வாதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.
800க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ள அம்மனுவில், வியட்னாமில் தேசிய அரசியல் அமைப்பு சீரமைக்கப்பட்டு பல கட்சிகள் அமைப்பு ஏற்படுத்தப்படவும், நீதித்துறை, சட்டத்துறை, செயல்பாட்டுத்துறை ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும் வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அரசின் கையில் உள்ள நிலவுடமையிலும் சீர்திருத்தம் தேவை என வலியுறுத்தும் அம்மனு, அந்நாட்டின் கட்டுப்பாட்டிலுள்ள வழிபாட்டுச் சுதந்திரம் உட்பட முழு மத சுதந்திரம் தேவை எனவும் கூறியுள்ளது.
இம்மனுவில் Vinh ஆயர் Paul Nguyen Thai Hop, வியட்னாம் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவில் ஒருவரான அருள்பணி Mary Joseph Le Quoc Thang, Ho Chi Minh நகர உயர்மறைமாவட்டத்தின் முதன்மை குரு Huynh Cong Minh John Baptist உட்பட பலர் கையெழுத்திட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.