2013-01-22 15:45:18

நேபாளத்தில் கிறிஸ்தவரல்லாதவரிடையே விவிலிய விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது


சன.22,2013. நேபாளத்தில் கிறிஸ்தவரல்லாதவரிடையே விவிலிய விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளதாக அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நேபாள மொழி விவிலியம் கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டுத் துவக்கத்திலும் அதிக அளவில் விற்பனையாகியுள்ளதாகவும், மேலும் பெருமெண்ணிக்கையில் அச்சிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் பிரச்சனைகளை எதிர்நோக்கும் மக்கள், விவிலியத்தில் தங்கள் நம்பிக்கைகளைப் பதித்துள்ளதாகத் தெரிவித்தார் கிறிஸ்தவ அருள்பணியாளர் காஹர ராஜ்.
2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நேபாள மக்கள்தொகையில் 1.5 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.