2013-01-17 15:52:47

மலேசிய நாட்டில் முதல் முறையாக திருப்பீடத்தின் தூதராக பேராயர் ஒருவர் நியமனம்


சன.17,2013. தற்போது பங்களாதேஷ் நாட்டில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவரும் பேராயர் ஜோசப் மரினோ அவர்களை, மலேசிய நாட்டின் திருப்பீடத் தூதராக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்துள்ளார்.
பேராயர் மரினோ அவர்களை, கிழக்கு டிமோர் நாட்டின் திருப்பீடத் தூதராகவும், Brunei நாட்டின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகவும் திருத்தந்தை நியமித்துள்ளார்.
50 வயது நிறைந்த பேராயர் மரினோ, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலபாமா மாநிலத்தில் பிறந்தவர். உரோம் நகரில் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் திருஅவைச் சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற பேராயர் மரினோ, 1988ம் ஆண்டு திருப்பீட நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு, Philippines, Uruguay, Nigeria, ஆகிய நாடுகளில் திருப்பீடத்தின் சார்பில் பணிகள் புரிந்துள்ளார்.
இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராய்க் கொண்டுள்ள மலேசிய நாட்டில், முதல் முறையாக திருப்பீடத்தின் தூதுவராக ஒருவர் நியமனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.