2013-01-17 15:42:53

நேர்காணல் – கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரம்


சன.17,2013. அன்பு நேயர்களே, ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18 முதல் 25 வரை, ஒவ்வொரு தலைப்புக்களில் கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரம் உலகெங்கும் சிறப்பிக்கப்படுகின்றது. இதன்படி, “கடவுள் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்?”(மீக்.6,6-8)என்ற தலைப்பில் இவ்வெள்ளியன்று இந்த 2013ம் ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரம் தொடங்குகிறது. இந்திய கிறிஸ்தவ மாணவர் இயக்கம், இந்தச் செப வாரத்திற்கான செபங்களையும் சிந்தனைகளையும் தயார் செய்துள்ளது. இந்தியாவில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதிகளை மையமாக வைத்து இந்திய கிறிஸ்தவ மாணவர் இயக்கம் இவற்றைத் தயார் செய்துள்ளது. இதையொட்டி, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் பணிக்குழுவின் செயலர் அருள்பணி தேவ சகாயராஜ் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம். RealAudioMP3
மீக்கா 6,6-8 ஆண்டவர் விரும்புவது`
ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா?7 ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?8 ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?







All the contents on this site are copyrighted ©.