2013-01-17 15:54:55

இறைவனுக்காகப் பசித்திருக்கும் நிலை இவ்வுலகில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது - கர்தினால் Robert Sarah


சன.17,2013. உடல் பசி இவ்வுலகில் மிக அதிகம் காணப்படும் அதே வேளையில், இறைவனுக்காகப் பசித்திருக்கும் நிலையும் இவ்வுலகில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது என்று வத்திகான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Cor Unum எனப்படும் பாப்பிறை பிறரன்பு அவை இவ்வியாழன் முதல் சனிக்கிழமை முடிய உரோம் நகரில் தனது 29வது கூட்டத்தை நடத்தி வருகிறது. 'பிறரன்பு, கிறிஸ்தவ மனித இயல், உலக நன்னெறி' என்ற தலைப்பில் இவ்வாண்டு நடைபெறும் இக்கூட்டத்தைப் பற்றி வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்குப் பேட்டியளித்த Cor Unum அவையின் தலைவர் கர்தினால் Robert Sarah, இவ்வாறு கூறினார்.
புதிய உரிமைகள் என்ற போர்வையில், இயற்கை வகுத்துள்ள நன்னெறிகளைப் புறக்கணிக்கும் போக்கு உலகில் வளர்ந்து வரும்வேளையில், கிறிஸ்துவ மனித இயல் கருத்துக்களை நன்னெறி, பிறரன்பு ஆகிய இரு கோணங்களில் ஆய்வு செய்யும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கர்தினால் Sarah விளக்கினார்.
இச்சனிக்கிழமை முடிய நடைபெறும் இக்கருத்தரங்கின் இறுதிநாளன்று கருத்தரங்கின் பிரதிநிதிகளை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சந்தித்துப் பேசுவார்.








All the contents on this site are copyrighted ©.