2013-01-17 15:58:32

அன்னை தெரேசா துவங்கிய பணிகள் இறைவன் எங்களுக்கு வழங்கியக் கொடைகள் - அருள்சகோதரி Glenda


சன.17,2013. கிறிஸ்துவின் உடலை ஒவ்வொரு நாளும் திருப்பலியிலும், நோயுற்றோரின் வடிவிலும் சந்திப்பது நம்பிக்கை ஆண்டில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்று அன்னை தெரேசா பிறரன்புச் சபை அருள்சகோதரி ஒருவர் கூறினார்.
'அன்பு செயல்வடிவில்' என்ற விருது வாக்குடன் முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா 60 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவில் துவங்கிய பணிகள் இறைவன் எங்களுக்கு வழங்கியக் கொடைகளாக உள்ளன என்று அருள்சகோதரி Glenda கூறினார்.
அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு வாடிய நோயுற்றவர்களுக்கென 1962ம் ஆண்டு கொல்கத்தாவில் அன்னை தெரேசா அவர்களால் துவக்கப்பட்ட Nirmal Hriday என்ற இல்லத்தின் தலைவியாகப் பணியாற்றும் அருள்சகோதரி Glenda, நம்பிக்கை ஆண்டைக் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
Nirmal Hriday என்ற இந்த இல்லத்தின் வழியாக இதுவரை 87,000க்கும் அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர் என்று கூறிய அருள்சகோதரி Glenda, இப்பணியில் தங்களையே ஈடுபடுத்த வரும் பல நாட்டு இளையோருக்கும் இவ்வில்லம் நம்பிக்கை தரும் அடையாளமாக விளங்குகிறது என்று எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.