2013-01-16 15:41:21

மாற்றுத் திறனாளியான Rimsha Masihயின் வழக்கு பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் ஆரம்பம்


சன.16,2013. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மாற்றுத் திறனாளியான Rimsha Masih என்ற சிறுமியின் வழக்கு இச்செவ்வாயன்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் ஆரம்பமானது.
பாகிஸ்தான் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், வன்முறை அரசியல் மூலம் நாட்டை அச்சத்திற்கு உள்ளாக்கும் தலைவர்களால் ஆபத்து உள்ளது என்று பாகிஸ்தான் பாப்பிறை மறைபரப்புப் பணி கழகத்தின் இயக்குனர் அருள்தந்தை Mario Rodrigues கூறினார்.
திருக்குர்ஆன் விளக்க நூலின் பக்கங்களை எரித்தார் என்று பொய் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட Rimsha Masih என்ற சிறுமியை, நவம்பர் மாதம் இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் விடுதலை செய்தது. தற்போது இவ்வழக்கு உச்சநீதி மன்றத்திற்குச் சென்றுள்ளது.
Rimsha Masih குடும்பம் வாழ்ந்த பகுதியில், அச்சிறுமியின் பெற்றோர் உட்பட இன்னும் பல கிறிஸ்தவர்கள் தங்கள் உயிருக்குப் பயந்து அப்பகுதியை விட்டு, தலைமறைவாகி உள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.