2013-01-16 15:40:25

பெங்களூரு விவேக் நகர் குழந்தை இயேசு திருத்தலத்தின் விழா


சன.16,2013. நான் ஓர் இந்துவாக இருந்தாலும், குழந்தை இயேசு திருத்தலத்தில் ஒருவகை அமைதியை அனுபவிக்கிறேன். கடந்த ஈராண்டுகளாய் நான் இந்த விழாவில் கலந்து வருகிறேன் என்று R.N. பிரமோத் என்ற இளைஞர் கூறினார்.
பெங்களூருவில் அமைந்துள்ள விவேக் நகர் குழந்தை இயேசு திருத்தலத்தின் விழா இத்திங்களன்று இரவு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்ற இவ்விழாவின் உச்சகட்டமாக, இத்திங்கள் இரவு நடைபெற்ற தேர் பவனியை பேராயர் Bernard Moras துவக்கிவைத்தார். கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல், பிற மதத்தினரும் இத்திருத்தலக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர் என்று இந்தியச் செய்தித் தாள்கள் கூறியுள்ளன.
தற்போது உரோம் நகரில் கர்தினாலாக இருக்கும் லூர்துசாமி ஆண்டகை, 1969ம் ஆண்டு பெங்களூரு பேராயராகப் பணியாற்றியபோது, விவேக் நகர் குழந்தை இயேசு திருத்தலத்தின் அடிக்கல்லை நாட்டினார். அப்போது ஒரு கூடாரமாக அமைக்கப்பட்டிருந்த இக்கோவில் 1979ம் ஆண்டு முழுமையான ஓர் ஆலயமாக உருமாறியது.








All the contents on this site are copyrighted ©.