2013-01-15 15:01:08

கற்றனைத் தூறும் - 'காபி' உருவான கதைகள்


'காபி' (Coffee) அருந்தும் பழக்கம் 15 அல்லது 16ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் மத்தியில் ஆரம்பமானது என்று கருதப்படுகிறது. காபிச் செடியை இஸ்லாமியர்கள் கண்டுபிடித்ததே ஒரு சுவாரசியமான கதை. அவர்கள் வளர்த்துவந்த ஆடுகள் ஒரு குறிப்பிட்டச் செடியின் சிறு பழங்களை உண்டபின், துள்ளிக்குதித்து, வித்தியாசமாக நடந்துகொண்டதைக் கண்ட இஸ்லாமியர்கள், அப்பழங்களைச் சுவைத்துப் பார்த்தனர். பழங்களைச் சுவைத்ததும் அவர்களுக்குள் புது சக்தி பிறந்ததைப்போல் உணர்ந்தனர்.
Abyssinia என்ற பகுதியில் அமைந்திருந்த Kaffa எனுமிடத்தில் இச்செடிகள் அதிகம் காணப்பட்டதால், அவ்விடத்தின் நினைவாக, 'காபி' என்ற பெயர் வழங்கப்பட்டது. Sufi என்ற முனிவர்கள் குழுவினர் தங்கள் இரவு வழிபாடுகளை விழித்திருந்து செய்வதற்கு உதவியாக இந்தப் பானத்தை அருந்தியதாகச் சொல்லப்படுகிறது.
எகிப்திலிருந்து அனுப்பப்பட்ட காபி விதைகளும், காபித்தூளும், இத்தாலியின் வெனிஸ் நகர் துறைமுகத்தின் வழியாக ஐரோப்பாவில் அறிமுகம் ஆனது. ஏமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட காபிச் செடியின் விதைகள் இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மலைப்பகுதியில் 1670களில் பயிரிடப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.