2013-01-14 16:03:14

கராச்சியில் நடைபெறும் தலிபான் வன்முறைகள் குறித்து தலத்திருஅவை கவலை


சன.14,2013. வன்முறைகள் குறித்த அச்சத்தின் பிடியிலிருக்கும் கராச்சியில், தலிபான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை உடனடியாக கட்டுப்படுத்தவேண்டிய காலம் வந்துள்ளது என அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் அப்பகுதி கத்தோலிக்கத் தலைவர்கள்.
ஒவ்வொரு நாளும் கராச்சி நகரில் 10 முதல் 12 பேர் கொல்லப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருவதாகவும் தெரிவித்தார் அந்நகர் பேராயர் ஜோசப் கூட்ஸ்.
கராச்ச்சி நகரில் வன்முறைகளால் தங்கள் உறவினர்களை இழந்த ஐந்து கத்தோலிக்கக் குடும்பங்களுக்கு தலத்திருஅவையின் நீதி மற்றும் அமைதி அவை 50,000 ரூபாயை வழங்கியுள்ளதாகவும் அறிவித்தார் பேராயர்.
அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 1,725 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.