2013-01-12 15:43:22

டிவிட்டர் இணையதளத்தில் திருத்தந்தையின் இருப்பு, நற்செய்தி அறிவிப்புக்குப் புதிய பாதையைத் திறந்துள்ளது


சன.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்திய திருப்பலி குறித்த விபரங்களை ஆண்டின் இந்த முதல் மாதத்தில் 25 இலட்சம் பேர் எட்டு மொழிகளில் டிவிட்டர் இணையதளம் வழியாகப் பார்வையிட்டிருக்கும்வேளை, டிவிட்டர் இணையதளத்தில் திருத்தந்தையின் இருப்பு, நற்செய்தி அறிவிப்பின் “ஒரு புதிய எல்லையாக” இருக்கின்றது என, திருப்பீட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
டிவிட்டர் இணையதளத்தில் திருத்தந்தையின் இருப்பு குறித்து கருத்து தெரிவித்த திருப்பீடச் சமூகத்தொடர்பு அவையின் அருள்பணி Paolo Padrini, திருத்தந்தையை அதிகம்பேர் பின்பற்றுகிறார்கள், அதிலும் சிறப்பாக, டிவிட்டர் இணையதளத்தில் அவர் இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக இருக்கின்றது என்று கூறினார்.
140 எழுத்துக்களையே அனுப்பும் வசதி கொண்ட சமூக ஊடகச் சேவையான டிவிட்டரில் முதன்முறையாக, கடந்த டிசம்பர் 12ம் தேதி குவாதாலூப்பே அன்னை மரியா திருவிழாவன்று திருத்தந்தை செய்தி அனுப்பினார். இந்தத் தொடக்கச் செய்தியை ஆங்கில மொழியில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், இஸ்பானியத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.