2013-01-12 15:50:23

ஈராக்கில் மதம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, கிர்குக் பேராயர் சாக்கோ


சன.12,2013. ஈராக்கில் மதம் முக்கிய அங்கம் வகித்தாலும், அது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இது வகுப்புவாதப் பிளவின் ஆபத்தை முன்வைக்கின்றது என, அந்நாட்டின் கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.
ஈராக்கில் சாதம் ஹூசேன் ஆட்சி வீழ்ந்த பின்னர் அந்நாட்டில் வகுப்புவாதப் போக்கு உருவாகியுள்ளது, இது தேசிய ஒன்றிப்பை ஊக்குவிப்பதைவிட வகுப்புவாத தனித்துவத்தை உந்தித்தள்ளுகிறது என்றும் கவலை தெரிவித்தார் பேராயர் சாக்கோ.
ஈராக் ஆக்ரமிக்கப்பட்டு ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகியுள்ளன, அந்நாட்டின் பழைய உறுதியான மனிதர் வீழ்த்தப்பட்டார், சனநாயகமும், சம உரிமைகளும் சுதந்திரமும் மக்களின் கனவுகள், ஆனால் மக்கள் ஊக்கமிழந்து இருக்கின்றார்கள் என்றும் கிர்குக் பேராயர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.