2013-01-12 15:51:46

இலங்கையில் நீதி அமைப்பின் “கறுப்பு வெள்ளிக்கிழமை” கடைப்பிடிப்பு


சன.12,2013. இலங்கையில் நீதிஅமைப்பு இறந்துவிட்டது என்பதற்காக அழும் “கறுப்பு வெள்ளிக்கிழமையாக”, சமயத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அந்நாட்டின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க அவர்கள் மீதான அரசியல்சார்ந்த குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னர், அவருக்கு எதிரான கண்டனப் பதவி நீக்கத் தீர்மானம் இவ்வியாழனன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
ஷிராணிக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகள் அனைத்தும் நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிடுவதற்கு வழி அமைத்துள்ளன என்று கத்தோலிக்க மற்றும் புத்தமதத் தலைவர்கள் உட்பட பல சமூக ஆர்வலர்கள் குறை கூறியுள்ளனர்.
அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும்பான்மை வகிக்கும் நாடாளுமன்றத்தில் அரசு முன்னெடுத்த இந்தக் கண்டனப் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியிருப்பதில் வியப்பேதும் இல்லை என ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.