2013-01-10 15:34:23

அரசுத் தலைவர் Hugo Chavez அவர்களின் உடல் நிலை பற்றிய உண்மையான விவரங்களை மக்களுக்குச் சொல்வது அரசின் தார்மீகக் கடமை - Venezuela ஆயர்கள்


சன.10,2013. Venezuela நாட்டின் அரசுத் தலைவர் Hugo Chavez அவர்களின் உடல் நிலை பற்றிய உண்மையான, தெளிவான விவரங்களை மக்களுக்குச் சொல்வது அரசின் தார்மீகக் கடமை என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
Cubaவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Chavez அவர்களின் உடல்நிலையைப் பற்றிக் கூற தகுதியான மருத்துவர் குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்று ஆயர்கள் தங்கள் ஆண்டு கூட்டத்தின் இறுதியில் வலியுறுத்தியுள்ளனர்.
Chavez அவர்களின் உடல்நிலை தளர்ந்துள்ள நிலையில், Venezuela நாட்டின் அரசியலில் நிலையற்ற தன்மை உருவாகியிருப்பது குறித்தும் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
அரசுத் தலைவர் பதவி காலியாகி உள்ளதென்றும், அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகள் இவ்வியாழனன்று நடைபெறும் என்றும் அந்நாட்டில் வதந்திகள் உலவி வரும் வேளையில், ஆயர்கள் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.