2013-01-05 15:13:32

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் சிறார் படைவீரர் குறித்து ஐ.நா. எச்சரிக்கை


சன.05,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அரசுக்கு ஆதரவான குழுக்களும் எதிர்தரப்பும் சிறார்களைப் படைக்குச் சேர்த்து வருவது குறித்து எச்சரித்துள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
18 வயதுக்குட்பட்ட சிறாரைப் போரிடுவதற்கும், போர்க்கருவிகளை விநியோகிப்பதற்கும், பாலியல் அடிமைகளாக வேலை செய்வதற்கும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் கட்டாயப்படுத்துகின்றன என்று அந்நாட்டுக்கான ஐ.நா. சிறார் அமைப்பின் பிரிதிநிதி Souleymane Diabate குற்றம் சாட்டினார்.
இந்நாட்டில் ஏறக்குறைய மூன்று இலட்சம் சிறார் புரட்சியாளர்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கடந்த மாதத்தில் சண்டை தொடங்குவதற்கு முன்னர் 2,500 சிறார், ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என ஐ.நா. கூறியது.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசுத் தலைவர் Francois Bozize பதவி விலக வேண்டுமெனக் கோரி, ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்கள் பல நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர் மற்றும் தலைநகரைக் கைப்பற்றப் போவதாக அச்சுறுத்தி வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.