2013-01-05 15:20:45

2015ம் ஆண்டின் ஐ.நா.வின் இலக்கை இந்தியா எட்டாது, சமூக ஆர்வலர்கள்


சன.05,2013. உலகில் ஏழ்மை, பசி, குழந்தை இறப்பு போன்றவற்றை 2015ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைப்பதாக ஐ.நா.வின் 191 உறுப்பு நாடுகள் இரண்டாயிரமாம் ஆண்டில் நிர்ணயித்த இலக்கை இந்தியா எட்டாது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஐ.நா.வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா இந்த இலக்கை எட்டுவதற்கு அதன் ஏழ்மை நிலை 23.9 விழுக்காடாக இருக்க வேண்டும், ஆனால் அந்நிலை நிர்ணயித்ததைவிட 3 விழுக்காட்டுக்கு சற்று அதிகமாக இருக்கின்றது, அதேபோல் குழந்தை இறப்பும் ஆயிரத்துக்கு 27 ஆக இருக்க வேண்டும், ஆனால் அது 43 ஆக இருக்கின்றது எனத் தெரிகிறது.
ஆயினும், 2015ம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியச் சிறாருக்கும் ஆரம்பக்கல்வி வழங்கப்பட்டிருக்கும் என்ற உறுதியை இந்தியா கொடுத்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.